புதிய நிதி நிறுவனங்களின் வருகையால் யாழ். வியாபாரிகள் பாதிப்பு: எஸ்.ஜெயசேகரம்

யாழ்.குடாநாட்டின் பொருளாதார வளங்களை அள்ளிக்கொண்டுச் செல்வதற்காக புதிது புதிதாக யாழில் முளைக்கும் நிதி நிறுவனங்களினால் யாழ்.குடாநாட்டு வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என்று யாழ். வணிகர் கழகத் தலைவர் எஸ்.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.யாழ்.வணிகள் கழகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.

வட பகுதியில் போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் நிறைவடைந்த நிலையில் வடபகுதியில் திடீரென முளைக்கும் நிதி நிறுவனங்கள் யாழ்.மக்களின் பொருளாதாரத்தை சுரண்டிச் செல்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தோடு வடபகுதியில் மூன்று வருடங்களுக்குள் வங்கிக் கிளைகள், லீசிங் கம்பனிகள், பினாஸ் கம்பனிகள், காப்புறுதி நிறுவனங்கள் என சுமார் 114 நிதி நிறுவனங்கள் வடபகுதியில் வியாபார நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளன.

வர்த்தகர்கள், பொதுமக்கள் இந்த நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வசதிகளைப் பெற்று வியாபார நடவடிக்கையினை ஆரம்பிக்கும் முன்னதாக கடனுக்கான வட்டிவீதத்தை அதிகரித்து யாழில் பொருளாதாரத்தை படுக்க வைத்திருக்கின்றன.

எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் கையேந்தும் பொருளாதாரமாக மற்றமடைவதை வணிகர் கழகம் எதிர்கிறது. மக்களின் வாழ்க்ககையில் அவர்கள் மீளமுடியாத கடன் சுமைகளுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts