புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதி

படத்திற்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் விஜய் சேதுபதி. கமல்ஹாசனுக்குப் பிறகு அப்படி நடித்து பெயரை வாங்கியவர் விக்ரம். ஆனால், விக்ரமையும் தற்போது பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு பல புதுவிதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

‘ஓரம்போ, வ’ படங்களை இயக்கிய புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய்சேதுபதி, கதிர், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் ‘விக்ரம் வேதா’ படத்தில் விஜய்சேதுபதி புதிய தோற்றத்தில் நடித்து வருகிறாராம். ‘சூது கவ்வும்’ படத்தில் நடுத்தர வயது கதாபாத்திரத்தில் நடித்தவர், ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்தவர், தற்போது ‘விக்ரம் வேதா’ படத்தில் மீண்டும் ஒரு நடுத்தர வயது கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் மாதவன் ஒரு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆகவும், விஜய்சேதுபதி தாதாவாகவும் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2017ம் ஆண்டு கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகலாம்.

Related Posts