ஆட்பதிவு திணைக்களம் 45 வருடங்களின் பின்னர் புதிய தேசிய அடையாள அட்டையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய தேசிய அடையாள அட்டைகள் நேற்று முன்தினம் முதல் வழங்கப்படுவதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இது ஸ்மார்ட் காட் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொருவரினதும் உடல் சார்ந்த தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே அடையாள அட்டைகளை வைத்திருப்பவர்கள் இந்த அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்றும் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க கூறினார்.