புதிய ஜனாதிபதியாக கோட்டா அறிவிப்பு – வர்த்தமானி வெளியீடு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7ஆவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.

இலங்கை சோசலிஷ குடியரசின் 7ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 8ஆவது ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இந்த தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 6,924,255 வாக்குகளை (52.25%) பெற்று இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு அவர் இன்று காலை அநுராதபுரத்தில் பதவியேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts