புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம்!!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (31) கண்டியில் வெளியிடப்பட்டது.

விஞ்ஞாபனத்தில் சில சிறப்பம்சங்கள் வருமாறு,

  • போதைப்பொருள், ஊழல் மற்றும் மதத் தீவிரவாதம் என்பவற்றுக்கு எதிரான போர்.
  • பலமான தேசத்தை உருவாக்குதல்.
  • தேசத்தை பாதுகாக்க ஸ்மார்ட் பாதுகாப்பு மற்றும் நவீன ஆயுதப்படை, அறிவார்ந்த புலனாய்வு வலையமைப்பு உருவாக்கம்.
  • மக்கள் சக்தியை ஒருங்கிணைக்கும் மக்களுக்கான அரசியலமைப்பு.
  • பாராளுமன்றில் 25% பெண்களுக்கான தேசிய பட்டியல் ஒதுக்கீடு.
  • இலங்கை முதன்மையாக வலுவான வெளிநாட்டுக் கொள்கை.
  • நவீன, பாகுபாடற்ற விரைவான நீதி அமைப்பு.
  • நீதியும் சுதந்திரமுமான ஊடகத்துறை. பேரழிவுகளின் போதான இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை. போட்டித்தன்மை மிகு பொருளாதாரம்.
  • மலிவான இணைய இணைப்பு மற்றும் எளிதான கொடுப்பனவு.
  • பொருந்தோட்டங்களை தரம் உயர்த்துதல். நீதியான சமூகத்தை கட்டியமைத்தல், நவீன யுகத்திற்கேற்ற நவீன கல்வி. பயன்தரும் சுகாதார சேவை.
  • 35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் மருத்துவ பரிசோதனை.
  • அனைவருக்கும் உறையுள், 2025ல் சொந்த வீடு கொண்ட சமூகம்.
  • தேசிய ஒற்றுமை மற்றும் சமத்துவம்.
  • இனம், மதம், வர்க்கம், பாலினம் கருத்தில் கொள்ளப்படாமல் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவார்கள்.
  • மும்மொழிக் கொள்கை.
  • நல்லிணக்கம், மீள்கட்டுமாணமும்.
  • நீண்டகால இடம்பெயர்வினால் பாதிக்கப்பட்டவர்களின் மீள்குடியேற்றம், வீடுகள் மற்றும் மறுசீரமைப்பு இன்ன பிற உதவிகள்.
  • வட, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான அலுவலகத்தை முழுமையாக ஆதரித்தல்.
  • நீண்டகாலம் விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்போருக்கு விடுதலை.
  • தனிநபர்கள், குழுக்கள், அரசியல் கட்சிகள், நிறுவனங்களின் வரலாற்று வகிபாகம், சிந்தனை போக்கு என்பவற்றை மாணவர்கள் புரிந்து கொள்ளும் பாடத்திட்ட சீரமைப்பு.

  • இலங்கையின் ஆண்மீகம்.
  • பெண்களுக்கு 52% சமவாய்ப்பு.
  • மாற்றுத்திறனாளிகளை அரவணைக்கும் ஆணைக்குழு நிறுவல்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு.
  • மலையக மக்கள்.அனைத்து தோட்ட தமிழ் குடும்பங்களுக்கும் 7 பேர்ச் காணி.
  • தங்குமிடம் இல்லாத அனைவருக்கும் தங்குமிடம்.
  • அவுட்-க்ரோவர் திட்டத்திற்கு அரச, தனியார் நிறுவனங்களுடன் கூட்டு.ஹைலேன்ட் பல்கலைக்கழகம் திறப்போம்.

Related Posts