இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்களின் பெயர் விபரம் வௌியிடப்பட்டுள்ளது.
அதன்படி முன்னாள் அணித் தலைவர் சனத் ஜயசூரிய புதிய தெரிவுக்குழு உறுப்பினர்களின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, சனத் ஜயசூரிய (தலைவர்), ரஞ்சிதட மதுரசிங்க, ரொமேஷ் களுவிதாரண, எரிக் உபசாந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவிற்கு விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர அனுமதி வழங்கியுள்ளார்.
மே மாதம் 01ம் திகதி முதல் புதிய தெரிவுக்குழு இயங்க ஆரம்பிக்கவுள்ளதுடன், அந்தக் குழு 2017 ம் ஆண்டு வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.