புதிய கடற்­படை தள­ப­தியின் நிய­மனம் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்த­ல்!

ஐக்­கிய அமெ­ரிக்­கா­விற்கு திரு­கோ­ண­ம­லையில் கடற்­படை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என்­பது நீண்­டநாள் கன­வாக உள்­ளது. புதிய கடற்­படை தள­பதி டிரவிஸ் சின்­னை­யாவும் அந்­நாட்டில் பணி­யாற்­றி­யவர்.

எனவே அவர் கடற்­படை தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை இலங்கையின் தேசிய பாது­காப்­புக்கு விடுக்­கப்­பட்­டுள்ள அச்­சு­றுத்­த­லாகும் என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்­துள்ளார். தேசிய சுதந்­திர முன்­ன­ணி விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­­து.

அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளதாவ­து,

இலங்­கையின் புதிய கடற்­படை தள­ப­தி­யாக டிரவிஸ் சின்­னையா நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இது நாட்டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் என்­பதே தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் நிலைப்­பா­டாகும்.

புதிய கடற்­படை தள­ப­தியின் இனம் தொடர்பில் எமக்கு பிரச்­சி­னைகள் எதுவும் இல்லை. கடற்­படை என்று வரு­கின்ற போது அவரின் இனத்தை முக்­கி­ய­மாக பார்க்க வேண்­டிய அவ­சியம் இல்லை.

அதே­நேரம் மேற்­கு­றிப்­பிட்ட அதி­காரி யுத்­த­கா­லத்தின் பின்னர் கடற்­ப­டை­யி­லி­ருந்து சட்­ட­பூர்­வ­மா­கவே விலகிச் சென்­றவர்.

அதன் பின்னர் ஐக்­கிய நாடு­களின் இலங்­கை­க்கான தூத­ர­கத்தில் 4 வரு­டங்கள் பாது­காப்பு ஆலோ­ச­க­ராக கட­மை­யாற்­றினார். அதனால் அவ­ருக்கு ஐக்­கிய நாடு­களின் அரச திணைக்­க­ளத்­தினால் தான் சம்­பளம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் 2015 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் இடம்­பெற்ற பின்னர் கடந்த அர­சாங்­கத்­தினால் அர­சியல் பழி­வாங்­க­லுக்கு ஆளா­ன­தாக கூறி கடற்­ப­டை­யி­லி­ருந்து விலகிச் சென்­றி­ருந்த நிலை­யி­லேயே இவர் தற்­போது மீண்டும் கடற்­படை தள­ப­தி­யாக நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

அதேபோல் அவர் நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் மீண்டும் கடற்­ப­டைக்கு அழைக்­கப்­பட்ட போது கிழக்கு மாகா­ணத்­திற்­கான கட்­டளை தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். அதி­லி­ருந்த தற்­போது கடற்­படை தள­ப­தியாக தர­மு­யர்த்­தப்­பட்­டுள்ளார்.

அவ்­வாறு பார்­க்கின்ற போது ஐக்­கிய நாடு­களின் இலங்­கை­க்கான தூத­ர­கத்தில் பாது­காப்பு ஆலோ­ச­க­ராக கட­மை­யாற்­றி­யவர் இலங்கை கடற்­ப­டையின் சட்­டத்­திற்கு முர­ணான வகையில் கடற்­ப­டையில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார்.

இவ்­வா­றான நிலையில் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வா­னது இலங்­கையின் கடல் பாது­காப்பின் மீதும் எப்­போதும் ஒரு கண் வைத்­தி­ருக்கும். அதேபோல் திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அமெ­ரிக்­காவின் இரா­ணுவச் செயற்­பாட்டு தள­மாக்­கிக்­கொள்­வ­தற்­கான நீண்­ட­கால திட்­ட­மிடல் ஒன்றும் கூட காணப்­ப­டு­கின்­றது.

அவ்­வா­றி­ருக்­கின்ற போது ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரகத்தில் பணியாற்றிய ஒருவர் இலங்கையின் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என்று கூற முடியாது. அதனால் நாட்டுப்பற்றுள்ள மக்கள் இது குறித்து அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts