புதிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டது இந்திய கிரிக்கெட் சபை!

இந்திய கிரிக்கெட் சபை வீரர்களுக்கான புதிய ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டது. இதில் புவனேஸ்வர் குமார் ‘ஏ’ தரத்துக்கு முன்னேறினார். அத்துடன் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங் ஆகியோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். உலகக்கிண்ண அணிக்குத் தேர்வானோரே இந்தப் புதிய பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Yuvraj-Gambhir

ஒப்பந்த விவரம் வருமாறு:

தரம் ‘ஏ’ – (வருட சம்பளம்: ஒரு கோடி இந்திய ரூபா – இலங்கை மதிப்பில் சுமார் 2 கோடியே 5 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா)

வீரர்கள்: எம்.எஸ். டோனி, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஆர். அஷ்வின், புவனேஷ்வர் குமார்

உள்ளே :- புவனேஸ்வர் குமார்
வெளியே:- சச்சின் டெண்டுல்கர்

தரம் ‘பி’ – (வருட சம்பளம் 50 இலட்சம் இந்திய ரூபா – இலங்கை மதிப்பில் சுமார் ஒரு கோடியே 2 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா)

வீரர்கள்: பிராக்ஜன் ஒஜா, முரளி விஜய், சத்தீஸ்வர் புஜாரா, ரவீந்திர ஜடேஜா, இசாந்த் சர்மா, சிகார் தவான், உமேஸ் யாதவ், ரோஹித் சர்மா, அஜிங்ய ரஹானே, அம்பதி ராயுடு, மொஹமட் ஷமி

வெளியே:- கௌதம் கம்பீர், யுவராஜ் சிங்

தரம் ‘சி’ – (வருட சம்பளம் 25 இலட்சம் இந்திய ரூபா – இலங்கை மதிப்பில் சுமார் 50 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா)

வீரர்கள்: அமித் மிஸ்ரா, வருண் ஆரோன், விரித்திமன் சகா, ஸ்ரூவர்ட் பின்னி, பங்கஜ் சிங், வினய் குமார், மோகித் சர்மா, தவால் குல்கர்னி, பர்வேஸ் ரசூல், அக்சர் பட்டேல், மனோஜ் திவாரி, ரொபின் உத்தப்பா, கர்ன் சர்மா, சஞ்சு சாம்சன், குல்டீப் யாதவ், கே.எல்.ராகுல்

உள்ளே: வருண் ஆரோன், ஸ்ரூவர்ட் பின்னி, பங்கஜ் சிங், வால் குல்கர்னி, பர்வேஸ் ரசூல், அக்சர் பட்டேல், மனோஜ் திவாரி, ரொபின் உத்தப்பா, கர்ன் சர்மா, சஞ்சு சாம்சன், குல்டீப் யாதவ், கே.எல்.ராகுல்
வெளியே: டினேஸ் கார்த்திக், ஜாதவ் உனாட்கட்

Related Posts