புதிய உள்ளூராட்சி மன்ற சபைகளை நிறுவும் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து அதற்கான உள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் பணிகள் எதிர்வரும் 20ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் பணிகள் கடந்த 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டங்களினதும் பெண் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் கிடைக்கத் தாமதமாகிது.

இந்நிலையில் தற்போது 20ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி கூறுகையில், “உள்ளூராட்சி மன்ற தலைமை ஆணையாளர் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றங்களின் முதலாவது கூட்டம் பிரதி உள்ளூராட்சி மன்ற ஆணையாளரின் பங்களிப்புடன் இடம்பெறவுள்ளது. புதிய உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை தெளிவுபடுத்துவற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்பு மாநகர சபையின் முதலாவதுகூட்டம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதன் அங்கத்தவர்களின் எண்ணிக்கை 119 ஆகும். அங்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையால் கொழும்பு மாநகர சபையில் இதற்கான வசதிகள் இல்லை. இதற்காக புதிதாக கட்டடம் ஒன்று அமைக்கப்பட உள்ளது” என கூறினார்.

Related Posts