புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 100 வாக்குகளால் நேற்று(வியாழக்கிழமை) நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலத்திற்கு எதிராக 41 வாக்குகள் பதிவாகியுள்ளது.

வரிமுறையினை இலகுப்படுத்தி முதலீட்டாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதே இந்த புதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தின் பிரதானம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சட்டமூலம் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts