புதிய உலக சாதனை படைத்துள்ள இலங்கை இளைஞன்

ஒரு நிமிடத்தில் 12mm உடைய 12 உருக்குக் கம்பிகளை வாயினால் வளைத்து ஹங்குராங்கெத்த பிரதேசத்தை சேர்ந்த ஜனக காஞ்சன முதன்னாயக என்ற இளைஞர் சாதனை படைத்துள்ளார்.

kambi-world-record

உலகில் சக்திமிக்க பற்களின் சொந்தக்காரன் என்ற கின்னஸ் சாதனை படைப்பதே கொழும்பு துறைமுகத்தில் பணிப்புரியும் இந்த இளைஞரின் எதிர்பார்ப்பாகும்.

கொழும்பு முகத்துவாரம் துறைமுக பகுதியில் உள்ள மகாவலி பயிற்சி நிறுவனத்தில், விளையாட்டு மருத்துவ அதிகாரிகள், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்டவர்கள் முன்னிலையில் நேற்று இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னர் ரஷ்யாவின் அலெக்சாண்டர் மொரம்ஸ்கி என்பவர் 12 கம்பிகளை வாயினால் வளைத்து உலக சாதனையை நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts