புதிய ஆளுநருக்கு எமது பிரச்சினைகள் நன்றாக தெரியும் – தவராசா

வடமாகாண புதிய ஆளுநராக தெரிவு செய்யப்பட்ட எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிகக்கார எமது பிரச்சினைகள் தொடர்பில் நன்கறிந்தவர் என வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார்.

thavarasa-epdp

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

‘புதிய ஆளுநர் நியமனம் வரவேற்கத்தக்கது. முறைப்படி ஆளுநரை நீக்கவேண்டும் அவ்வாறு நீக்கினால் அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் என்று நான் பல தடவைகள் அவையில் கூறியிருக்கிறேன்.

தற்போதய ஆளுநர் சிறந்த நிர்வாகம் தெரிந்தவர். அவர் நல்லிணக்க ஆணைக்குழுவில் கடமையாற்றியவர். எனவே அவருக்கு எமது பிரச்சினைகள் தொடர்பாக தெரியும். எனவே, அவர் வடக்கு மாகாணத்துக்கான ஆளுநராவதற்கு தகுதியுடையவரே எனக்கூறினார்.

Related Posts