இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவனுமாகிய குமார் சங்கக்கார எதிர்வரும் சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரில் புதிய அவதாரமெடுக்கவுள்ளார்.
இதனை சர்வதேச கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமான அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள சம்பியன் கிண்ண தொடரில் குமார் சங்கக்கார கிரிக்கெட் வர்ணனையாளராக முதல்முறையாக களமிறங்கவுள்ளார்.
சங்காவுடன் இணைந்து அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங், நியூசிலாந்து அணியின் பிரண்டன் மெக்கலம், தென்னாபிரிக்க அணியின் முன்தனாள் தலைவர் கிரேம் ஸ்மித் ஆகியோர் இம் முறை இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள சம்பியன் கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக வர்ணனையாளர்களாக களமிறங்கவுள்ளனர்.
இவர்களுடன் இணைந்து சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர்களான சௌரவ் கங்குலி, ஷேன் வோர்ன், மைக்கல் ஸ்லட்டர், நஷீர் குசைன், மைக்கல் அத்ரென், ஷோன் பொலக், சன்ஞய் மஞ்ரேக்கர், இயன் பிஷப், ரமீஷ் ராஜா, சிமென் டுயுல்,ஆதர் அலிகான் ஆகியோர் கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.