புதிய அரசே காணாமல் போன உறவுகள் தொடர்பில் பதில் கூறு!

புதிய மைத்திரி அரசு காணாமல் போனவர்கள் தொடர்பில் விரைவில் பதில் கூற வேண்டும் என்றும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

kilinochchi-1

கிளிநொச்சி காணாமல் போனோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டம் இன்று காலை 9 மணிக்கு ஏ 9 வீதியில் உள்ள பழைய மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆரம்பமானது.

இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் காணாமல் போனவர்களது உறவுகள் , சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

kilinochchi-4

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் மதத்தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்கள் ஆகியோரும் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

இவ்வாறு பழைய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போராட்டம் அமைதியான முறையில் பேரணியாக சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கான மகஜரை அரச அதிபரிடம் வழங்கி வைத்தனர்.

அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில், நீண்ட காலமாக எந்த தீர்வுகளும் இன்றி காணாமல் போனோர் மற்றும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் பிரச்சினையை கவனத்திற்கு கொண்டு வந்து, விரையில் நல்லதொரு தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதேபோன்றதொரு போராட்டம் நாளையதினம் வவுனியா நகரசபை மண்டபத்திலும் இடம்பெறவுள்ளது.

மேலும் படங்களுக்கு…

Related Posts