புதிய அமைச்சர்கள் 10 பேர் சற்று முன்னர் சத்தியப் பிரமாணம்

gov_logஇலங்கையின் அமைச்சரவையில் புதிய அமைச்சர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

புதிதாக 10 அமைச்சர்கள், 2 திட்ட அமைச்சர்கள், 6 பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துகொண்டனர்.

அமைச்சர்கள் :

பெற்றோலிய வளத்துறை – அனுர பிரியதர்ஷன யாப்பா
சுற்றாடல் துறை – சுசில் பிரேமஜயந்
மின் சக்தி – பவித்ரா வன்னியாராச்சி
தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி – சம்பிக்க ரணவக்க
முதலீட்டு ஊக்குவிப்பு – லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன
வன விலங்கு சேவைகள் – விஜித் விஜித முனி சொய்சா
உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் – பசீர் சேகுதாவூத்
கல்விச் சேவைகள் – துமிந்த திசாநாயக்க
தாவரவியல் மற்றும் பொது விநோதம் – ஜயரத்ன ஹேரத்
சீனிக் கைத்தொழில் – லக்ஷ்மன் செனவிரத்ன

திட்ட அமைச்சர்கள் :

நிர்மல் கொத்தலாவல – துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள்
ரோஹித அபேகுணவர்த்தன – துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள்

பிரதி அமைச்சர்கள்:

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா – பொருளாதார அபிவிருத்தி
எஸ்.எம்.சந்திரசேன – பொருளாதார அபிவிருத்தி
பைஸர் முஸ்தபா – முதலீட்டு ஊக்குவிப்பு
அப்துல் காதர் – சுற்றாடல் மற்றும் புதுபிக்கத்தக்க ஆற்றல்
சுசந்த புஞ்சிநிலமே – பொருளாதார அபிவிருத்தி
சரத் குமார குணரத்ன – மீன்பிடி மற்றும் நீர்வழங்கல்

Related Posts