புதியவகை பெற்றோலை இலங்கையில் அறிமுகம் செய்யும் IOC நிறுவனம்!

வரலாற்றில் முதன்முறையாக இந்தியன் ஒயில் நிறுவனமான IOC ஒக்டேன் 100 சூப்பர் ரக பெற்றோலை இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

அதன்படி, கடந்த 18 ஆம் திகதி மும்பாய் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து இந்த எரிபொருள் தொகை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெற்றோல் வகை XP 100 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் IOC இன் மற்றுமொரு புதிய தயாரிப்பை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வது மிக முக்கியமான நிகழ்வாகும் என IOC இன் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் வீ.சதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Related Posts