உள்நாட்டில் வெளிப்புற உணவு மற்றும் பானவகைத் தீர்வுகளை வழங்குவதில் சந்தையில் முன்னிலை வகித்துவருகின்ற Nestle Professional தனது புத்தம் புதிய உயர் வகை கோப்பி தீர்வான Nescafe Alegria இனை அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலமாக இலங்கையில் உயர் வகை கோப்பித் தீர்வுகள் சந்தையில் புரட்சிகரமான மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.
Nescafe Alegria கோப்பி தீர்வானது சௌகரியம், பல்துறை சிறப்பம்சம் மற்றும் தரம் ஆகியவற்றைக் கொண்டுள்ள ஒரு புத்தம்புதிய, புத்தாக்கத்துடனான கோப்பி வழங்கல் தீர்வாக உலகில் முதன்மை வகிக்கும் கோப்பி வர்த்தகநாமமான Nescafe இன் அனைத்து அத்தியாவசியமான சிறப்பம்சங்களையும் ஒருங்கே கொண்டுள்ளது.
மிகவும் தீவிரமான கோப்பி பிரியர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இது, Espresso, Americano, Cappuccino, Latte Macchiato மற்றும் Lungo ஆகிய கோப்பியை அடிப்படையாகக் கொண்ட ஐந்து பானவகைகளை வழங்குவதுடன், மேலும் ஐஸ் கோப்பி மற்றும் Frappe இற்கான அடிப்படை மூலத்தையும் வழங்குகின்றது.
புத்தம்புதிய இந்தப் புத்தாக்கம் தொடர்பில் Nestle Professional நிறுவனத்தின் உதவித் தலைமை அதிகாரியான ஜெகத் வெதகே கருத்துத் தெரிவிக்கையில்,
வழமையான கோப்பி நுகர்வோர் மத்தியில் மாற்றங்களுடனான வளர்ச்சியை நாம் எமது கண்கூடாகக் காணமுடிகின்றது. அண்மைக்காலங்களில் உணவு மையங்களின் எண்ணிக்கை மிகத் துரிதமாக அதிகரித்துவந்துள்ளது. நுகர்வோர் கோப்பியை சுவைத்து மகிழும் போது அதன் தனிச்சிறப்பை நாடும் போக்கு அதிகரித்துச் செல்கின்றது.
Nescafe Alegria கோப்பித் தீர்வானது மரபுரீதியான கோப்பி இயந்திரம் வழங்கும் அதே நன்மைகளைக் கொண்டுள்ளதுடன், எளிமையான தொழிற்பாட்டுமுறை மற்றும் இணையற்ற தயாரிப்பு நேரம் ஆகியவற்றுடன் உண்மையான உயர் வகை கோப்பியின் சுவை அனுபவத்தை வழங்குகின்றது. என குறிப்பிட்டார்.