புதன்கிழமை வர்த்தக நிலையங்களுக்கும் விடுமுறை

நல்லூர்க் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு சகல வர்த்தக நிலையங்களுக்கும் விடுமுறை வழங்குமாறு யாழ்.வணிகர் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக யாழ். வணிகர் கழகசெயலாளர் இ. ஜனக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் நேற்று முன்தினம் 27 ஆம் திகதி நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்திற்கு அமைய 31ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவிருக்கும் வரலாற்றுச் சிறப்மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறை வழங்குமாறு கேட்டுக்கொள்வதோடு பெருந்தொகையானமக்கள் இத் தேர்த்திருவிழாவில் கலந்துகொள்வதால் அவர்களின் நன்மை கருதி அத்தியாவசியத் தேவைகளான மருந்தகங்கள் மற்றும் உணவகங்களை திறந்து மக்களுக்கு வழமை போன்று சேவைகளை வழங்குமாறு யாழ்ப்பாணம் வணிகர்கழகம் வேண்டுகோள் விடுக்கின்றது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை வரும் புதன்கிழமை யாழ்மாவட்ட பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts