புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் – வெளியாகியுள்ள எச்சரிக்கை

உக்ரைன் அதிக நிலப்பரப்பை மீண்டும் கைப்பற்றுவதால் புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக உக்ரைனின் முன்னாள் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் எந்தப் பகுதியை மீண்டும் கைப்பற்றுகிறதோ அந்த அளவுக்கு விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களை நாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என உக்ரைனின் முன்னாள் பிரதமர் அர்செனி யாட்சென்யுக் தெரிவித்துள்ளார்..

சர்வதேச ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“ஏமாற்றுவதும் பொய் சொல்வதும் புடினுக்கு இயல்பான ஒரு வடிவமாகிவிட்டதாகவும், அவரது சர்வாதிகாரத்திற்கு எதிராக வலுவான மற்றும் தைரியமான நடவடிக்கைகள் தேவை என்றும் யாட்சென்யுக் கூறியுள்ளார்.

உக்ரைனின் தலைநகர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த தாக்குதலானது புடின் மற்றும் அவரது இராணுவ அதிகாரிகள் மற்றும் புடினுக்கு ஆதரவான ரஷ்யர்கள் செய்த போர்க்குற்றங்களின் மூர்க்கத்தனமான செயலாகும்.

ரஷ்யத் தலைவர் போர்க்களத்தில் தோற்றுப் போகிறார் என்றும் உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளிடமிருந்து ஒன்றுபட்ட பதிலை எதிர்பார்க்கவில்லை என்றும் யாட்சென்யுக் சுட்டிக்காட்டியுள்ளார்.

அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி புடின் பேசுவதற்குக் காரணம், மேற்கத்திய நாடுகளை அச்சுறுத்துவது, ஆயுத விநியோகத்தை நிறுத்துவது மற்றும் உக்ரைன், ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்துவதற்கு என்று அவர் மேலும் கூறினார்.

Related Posts