புடினுக்கு எதிராக களமிறங்கிய வாக்னர் படை தலைவர் உயிரிழப்பு

புடினுக்கு எதிராக ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை மேற்கொண்ட வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்துள்ளார்.

விமான விபத்தொன்றில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்வெர் பிராந்தியத்தில் உள்ள குசென்கினோ கிராமத்திற்கு அருகே விமானம் விபத்துக்குள்ளானதாக ரஷ்ய அவசர சேவைகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை விபத்து நடந்த இடத்தில் எட்டு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் மூன்று பணியாளர்கள் உட்பட 10 பேர் இருந்ததாகவும் அனைவரும் விபத்தில் இருந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல்களின்படி தெரியவந்துள்ளது.

Related Posts