புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான மரபணு அறிக்கை இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இதுவரை காலமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் இருந்த மரபணு அறிக்கை இன்றைய தினம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதுவரை இரண்டு பிரிவுகளாக இடம்பெற்று வந்த வழக்கு விசாரணைகள் ஒரே வழக்காக மாற்றப்பட்டுள்ளது. மேலும் குறித்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் 1ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.