புங்குடுதீவு மாணவி கொலை : சந்தேக நபர்கள் மூவருக்கு 21ஆம் திகதி வரை மறியல்

புங்குடுதீவில் பாடசாலை மாணவி கொடூரமாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான லெனின் குமார் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

புங்குடுதீவைச் சேர்ந்த பூபாலசிங்கம் இந்திரகுமார்,ஜெயக்குமார், தவக்குமார்,ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

18 வயதுடைய குறித்த மாணவி கடந்த புதன்கிழமை பாடசாலைக்குப் புறப்பட்டுச் சென்றிருந்த நிலையில் காணாமற்போயிருந்தார்.

பின்னர் பாடசாலை செல்லும் வழியிலுள்ள ஆலடியை அண்மித்துள்ள பாழடைந்த வீட்டின் பின்புறமாகப் பற்றைக்குள் இருந்து கை,கால்கள் கட்டப்பட்டு,வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அவர் மிக மோசமான கொடூரமான கூட்டு வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமையை உடற்கூற்றுப் பரிசோதனை உறுதிப்படுத்தியுள்ளது.

அது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தில் ஒருவரைக் கைது செய்திருந்தனர்.

அவரது விசாரணை மூலமாக மற்றைய இருவரும் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் முன்னரும் குற்றச் செயல் ஒன்றில் தொடர்புபட்டிருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

Related Posts