புங்குடுதீவு மாணவி கொலை: சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இணங்காணப்பட்ட சந்தேக நபர்கள் 09 பேர்களுக்கான பிணை யாழ். மேல் நீதிமன்றத்தினால் இன்று மறுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாணைகள் எதிர்வரும் 10.08.2016 இடம்பெறும் என்றும் அன்றைய தினம் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்தார்.

குறித்த வழக்கின் சந்தேக நபர்கள் 09 பேரும் இன்றைய தினம் யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க கோரி சட்டமா அதிபரின் சார்பில் அரச தரப்பு சட்டதரணியான சக்தி இஸ்மாயில் மேல் நீதிமன்றத்தில் விசேட மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

எனினும் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க மறுத்த நீதிபதி, விசாரணைகளை துரிதப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

Related Posts