Ad Widget

புங்குடுதீவு மாணவி கொலை சந்தேகநபர்கள் மன்றில் மன்றாட்டம்

நாங்கள் குற்றம் செய்யவில்லை. எங்களை விடுதலை செய்யுங்கள் என புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்றுஞ திங்கட்கிழமை (23) மன்றாட்டமாகக் கேட்டக்கொண்டனர்.

கொலை செய்தீர்கள் என்பதற்கு அப்பால், கொலையுடன் தொடர்புபட்டுள்ளீர்களா என்ற ரீதியிலும் விசாரணைகள் இடம்பெறும் என நீதவான் செல்வநாயகம் லெனிக்குமார் இதன்போது கூறினார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேகநபர்களின் மரபணுப் பரிசோதனை அறிக்கை இன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

சம்பவம் நடைபெற்ற தினத்தில் கொழும்பில் நின்றதாகக் கூறிய சந்தேகநபர், அதனை தன்னால் உறுதிப்படுத்த முடியும் எனக்கூறினார்.

ஏற்கெனவே இதனைக்கூறியுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் எனவும் நீதவான் பதிலளித்தார்.

இதனையடுத்து சந்தேகநபர்களை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 1ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

புங்குடுதீவு மாணவி கடந்த மே மாதம் 13ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts