புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டு உள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.ரியால் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் பத்து பேரும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து சந்தேக நபர்கள் பத்து பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு இட்டார்.

அதேவேளை கடந்த 28ஆம் திகதி குறித்த வழக்கில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 10 ஆவது மற்றும் 12 ஆவது சந்தேக நபர்கள் இருவரும் அவர்களுக்கு எதிராக சாட்சி ஆதாரங்கள் இல்லாமையால் அவர்கள் இருவரையும் வழக்கில் இருந்து விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் பரிந்துரை செய்தமையை அடுத்து அவர்கள் இருவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts