புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: சந்தேக நபர்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு மீண்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது 12 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலை படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து சந்தேக நபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டதுடன் , அன்றைய தினத்திற்கு வழங்கினை ஒத்திவைத்தார்.

இதேவேளை நேற்றயதினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. குறித்த வழக்கின் ஆரம்ப காலத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்த போதிலும் , கடந்த சில மாதங்களாக பாதுகாப்புக்கள் ஓரளவு தளர்த்தப்பட்டு இருந்தன.

தற்போது மீண்டும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டு உள்ளது.கடந்த 27 ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலை பேருந்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் சிறைசாலை அதிகாரி , உத்தியோகஸ்தர் மற்றும் 5 கைதிகள் உயிரிழந்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts