ஹம்பகா – மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், அவர்கள் கொழும்பிலேயே சிகிச்சை பெற்றுவருவதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
தொற்றுக்குள்ளான 10 போில் 9 பேர் புங்குடுதீவை சேர்ந்தவர்கள் எனவும், மற்றொருவர் சாவகச்சோியை சேர்ந்தவர் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளதுடன், தொற்றுக்குள்ளானவர்கள் யாழ்ப்பாணம் வந்துசெல்லவில்லை. எனவும் கூறியிருக்கின்றார்.