புகைப் பரிசோதனை கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அக்கட்டணத்தை பாடசாலை மாணவர்களிடமிருந்தே அறவிடுவோம் என்று மாவட்டங்களுக்கு இடையிலான அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது.
மூன்று வருடகளுக்கு பழைமையான வாகனங்களுக்காக வருடாந்த வாகன அனுமதிபத்திரத்தை பெற்றுக்கொள்ளும் போது புகைப் பரிசோதனை கட்டமாக வருடாந்தம் 5,000 ரூபாய் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமான அக்கட்டணத்தை பாடசாலை மாணவர்களிடமிருந்தே அறவிடுவோம் என்றும் அச்சங்கம் அறிவித்துள்ளது.