புகையிரதக் கடவை விபத்துகளைத் தடுக்க வடமாகாண சபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை (24.08.2017) வட மாகாண சபையில் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வடக்கிலுள்ள புகையிரதக் கடவைகளில் பல பாதுகாப்பற்றவையாகக் காணப்படுவதனால் தொடர்ச்சியான விபத்துகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனை அவர் அந்த பிரேரனையில் சுட்டிகாட்டவுள்ளார்.
எனவே முதலமைச்சர் மற்றும் நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணிகள், மின்சாரம், வீடமைப்பும் கட்டட நிர்மாணமும், தொழிற்துறை, சுற்றுலாத்துறை, உள்ளூராட்சி மற்றும் மாகாண நிர்வாகத் துறை அமைச்சு உள்ளூராட்சி சபைகளிற்குப் பணிப்புரை வழங்க வேண்டும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் புகையிரத சேவைகள் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு ஆவணம் செய்யவேண்டும் எனவும் தவராச தமது பிரேரணையில் சுட்டிகாட்டவுள்ளார்.