கிளிநொச்சி பரந்தன் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் சிக்கிய நபர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (05) காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டர் சைக்கிளில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட நபர் மீது புகையிரதம் மோதியதில் குறித்த நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
பரந்தன் புகையிரத நிலையத்திலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உமையாள்புரம் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட போது, யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.