புகையிரதப் பாதை அமைத்தமையினை எதிர்த்து மக்கள் போராட்டம்

சாவகச்சேரி புளியடியில் வீதியினை மறைத்து தண்டவாளம் அமைக்கப்பட்டமையால் அதனூடாக போக்குவரத்து மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Chavakachcherey

இது தொடர்பாக புகையிரத்திணைக்களம், சாவகச்சேரி நகரசபை ஆகியோரிடம் முறைப்பாடுகள் தெரிவித்தும் அவர்கள் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் உள்ளனர் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடிய பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ‘இப்பகுதியில் வீதி அமைப்பதற்கு சாவகச்சேரி நகரசபை அனுமதி தந்தால் மட்டுமே வீதி அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.

இதுதொடர்பாக சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர் இ.தேவசகாயம்பிள்ளை தெரிவிக்கையில்,

குறித்த பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே புகையிரதத் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளோம். அவர்கள் இதுதொடர்பாக முடிவு செய்வதாகத் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் இந்த வீதியினைப் அமைத்து கொடுப்பதாக அவர் தெரிவித்தார்.

Related Posts