புகையிரதப் பாதைகளில் நடப்பவர்களுக்கு அபராதம்!

புகையிரதப் பாதைகளில் நடப்பவர்களுக்கு எதிராக இன்று திங்கட்கிழமையிலிருந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் பாதைகளில் நடந்துசெல்பவர்களினால் கடந்த காலங்களில் அதிகளவான உயிராபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன், ரயில் பயணங்களின்போது அதற்கான பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கு இன்று முதல் 3000 ரூபா அபராதம் விதிக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது 1500 ஆக உள்ள அபராதத் தொகையே திங்கட்கிழமையிலிருந்து 3000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் பயணச்சீட்டுக்கள் இன்றி பயணிப்போரின் தொகை அதிகரித்துள்ளதாலேயே 3000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Posts