பம்பலபிட்டிய பிரதேசத்தில் ரயிலில் மோதி பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸை நோக்கி பயணித்த ரயிலில் மோதி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடவத்தை, சூரியபாலுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
பேலியகொட பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, வெள்ளவத்தையில் இராமகிருஷ்னன் வீதிக்கு அருகில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அளுத்கமையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் மோதி குறித்த பெண் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர் என்று பொலிஸார் நம்புகின்றனர்.