‘புகை’யாகப் பரவும் ‘கபாலி’ நாயகியின் படம்

ராதிகா ஆப்தே, இன்னும் ஒரு மாதத்திற்குள் தமிழ்நாட்டில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயராக இருக்கப் போகிறார். ஆனால், அதற்குள் பல்வேறு காரணங்களுக்காக அவருடைய பெயர் ஒரு புகைச்சலை கிளப்பியிருக்கிறது.

rathika-apththey

இந்த முறை, அவர் புகை பிடிக்கும் புகைப்படம் ஒன்றை காற்றில் வேகமாகப் பரவும் புகையைப் போல பரவி வருகிறது. அந்தப் புகைப்படம் சமீபத்தில் லண்டனில் அவர் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால், அது திரைப்படம் ஒன்றிற்கான புகைப்படமா அல்லது நிஜமாகவே எடுக்கப்பட்ட புகைப்படமா என்றும் சிலர் சந்தேகத்தை கிளப்புகிறார்கள்.

கடந்த வாரம்தான் இதழ் ஒன்றிற்கான அட்டைப் படத்தில் படு கிளாமராக அவர் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகப் பரவியது. இந்த வாரம் புகை பிடிக்கும் புகைப்படம் பரவி வருகிறது. ‘கபாலி’ படம் வெளிவருவதற்குள்ளாகவே தமிழ்நாட்டில் ராதிகா ஆப்தே புகழ் நன்றாகப் பரவிவிடும் போல இருக்கிறது.

புகை பிடிக்கும் காட்சிகளில் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கிய நாயகனே புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அவரைப் பார்த்தாவது அவரின் ‘கபாலி’ நாயகி கற்றுக் கொள்ளலாமே என்கின்றனர் சிலர்.

Related Posts