புகைப்பிடித்தல் காரணமாக வருடத்திற்கு 30 ஆயிரம் பேர் வரையில் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவி க்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தந்தைகள் புகைப்பிடிப்பதன் காரணமாக உயிரிழக்கும் குழந்தைகளும் அவர்களுள் உள்ளடக்கப்படுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புகைத்தலற்ற சமுதாயம் ஒன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாட்டை வலுவடைய செய்வதாக அவர் தெரிவித்தார்.
பணம், சலுகைகள் அல்லது பிறநலன்களுக்கு அடி பணியாது மக்கள் சேவைக்காக செயற்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.