புகைப்பிடிக்கும் நபர்களுக்கு வைரஸ் பரவும் வீதம் அதிகம்!!! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!!

கொரோனா வைரஸ் பரவுவதற்கு புகைப்பிடித்தல் பிரதான காரணமாக அமைந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே இதனை கூறியுள்ளார்.

இந்த நிலைமை குறித்து தொடர்ந்தும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெளிவுப்படுத்தி வந்துள்ளது.

நடைமுறையில் இருக்கும் சட்டம் போதுமானதாக இல்லை என்றால், சட்டத்தை உருவாக்கி நாட்டில் அவசர நிலையை அறிவிக்க வேண்டும்.

வர்த்தமானி அறிவித்தல் மூலம் சட்டத்தை அறிவிக்க வேண்டும். புகைப்பிடித்தல் வைரஸ் பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளது.

சிகரெட் விற்பனை மிகவும் ஆபத்தான நடவடிக்கை. புகைப்பிடிக்கும் நபர்களுக்கு வைரஸ் பரவும் வீதம் அதிகம்.

வாழ்க்கையை நேசிப்பவர்களாக இருந்தால் புகைப்பிடித்தலை உடனடியாக நிறுத்துமாறு மருத்துவர் அளுத்கே கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts