புகைப்பரிசோதனை சான்றிதழை விட்டுச் சென்றால் ரூபா 500 தண்டம்!!

வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் 33 தவறுகளுக்காக சம்பவ இடத்திலேயே விதிக்கப்படும் தண்டப்பணம் நேற்று 15ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் அதிகரிக்கப்படுகின்றன.

வாகான புகைப் பரிசோதனைச் சான்றிதழை எடுத்துச் செல்லத் தவறினால் 500 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என புதிய போக்குவரத்து விதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை அந்தச் சான்றிதழ் வாகன வரி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் அதனை போக்குவத்தின் போது பயன்படுத்தவேண்டும் என்ற கட்டாயம் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது.

அதிவேக சாரதியத்துக்கு இதுவரை ஆயிரம் ரூபா விதிக்கப்பட்ட தண்டம் 3 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைவாக வாகன சாரதியத்துவத்தில் விடும் தவறுகள் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த வர்த்தமானி அறிவிப்பு இன்று 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுவரையில் அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் அறவீடு 23 வாகன தவறுகளுக்காக மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் சில நீக்கப்பட்டு, மேலும் பல புதிததாக இணைக்கப்பட்டு தற்பொழுது 33 தவறுகளை உள்ளடக்கும் வகையில் செயற்படுகின்றது.

இதற்கமைவாக இந்த தண்டப்பணம் 30 தொடக்கம் 50 சதவீதம் வரையாக அதிகரிக்கப்படுள்ளது.
அதிக வேகத்துடன் வாகனத்தை செலுத்துவதற்கான தண்டப்பணம் 3 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.

பொலிஸாரின் உத்தரவுகளுக்கு செவிமடுக்காமல் செயல்படும் சாரதிகளுக்கு தண்டப்பணம் 2 ஆரயிரம் ரூபாவாகவும், ஆலோசனை அனுமதிப்பத்திரம் அல்லாமல் ஆலோசனை பணிகளில் ஈடுபடுவதற்கான குற்றச் செயல்களுக்கு ரூபா 2 ஆயிரம் என்ற ரீதியில் அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடுமுழுவதிலும் உள்ள 489 பொலிஸ் நிலையங்களுக்கு புதிய தண்டனை விதிப்பு தொடர்பான குற்றச்சாட்டு அடங்கிய விபர ஆவணம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக வாகன போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பணிப்பாளர் தெரிவித்தார்.

Related Posts