புகைத்தலுக்கு அடிமையானவர்களை மீட்க புதிய வசதி

புகைத்தலுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி 1948 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக ஆலோசனை சேவைகள் வழங்கப்படவுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானத்தை ஒழிப்பதற்கான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார்.

வார நாட்களில் அலுவலக நேரங்களில் இந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இந்த தொலைபேசி சேவையை நீண்ட நேரம் செயற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறித்த ஆலோசனையானது பயிற்சி பெற்ற பொது சுகாதார பரிசோதகர்களின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் டொக்டர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார்.

Related Posts