புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்க மறுக்கும் அவுஸ்திரேலியா

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக புகலிடம் தேடி வரும் தமிழர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது சட்டதிட்டங்களுக்கு அமைய ஏற்க மறுத்து வருகின்றது.மெல்பேர்னிலிருந்த இலங்கைத் தமிழர் ஒருவர் ஒக்டோபர் 31ம் திகதி இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டார். அவுஸ்திரேலிய குடியேற்ற அதிகாரிகள் அகதிகளிடத்தில் கடைசி நேரத்தில் பல கேள்விகள் கேட்டு, சட்டதிட்டங்களுக்கு அமைவாக இல்லையெனின் திருப்பி அனுப்பி விடுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,40-50 வயது மதிக்கத்தக்க நபரொருவர் தனது சகோதரர் ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக இருநது கொல்லப்பட்டதையடுத்து, பாதுகாப்புத் தேடி அவுஸ்திரேலியாவிற்குச் சென்றுள்ளார். இவரையும் இறுதி நேரத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. கடந்த ஜுன் மாதம் தயான் அந்தோனி எனப்படும் தமிழர் ஒருவரையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் வலுக்கட்டாயமாக நாடு கடத்தியிருந்தது.

இவர்களெல்லாம் அவுஸ்திரேலிய குடியேற்ற அதிகாரிகளினால் சட்டதிட்டங்களுக்கு அமைவாக கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை என தெரிவித்து புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டு, உடனடியாக நாடு கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தொடர்ச்சியாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அகதிகள் தொடர்பாக கடுமையான போக்கைக் கடைப்பிடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடி வருவோரை, பிரித்தானியாவிற்கு அனுப்பும் திட்டத்தினை கைவிடுமாறு, பிரித்தானிய உயர் நீதிமன்றம் அவுஸ்திரேலியாவிற்கு உத்தரவிட்டுள்ளது.

Related Posts