‘பீப்’ சர்ச்சைக்குப் பிறகு வந்திருக்கும் சிம்பு பாட்டு!

வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார் நடிகர் சிம்பு. தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 16 ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டி வருகின்றன.

simbu

மறுபுறம் மக்களை 100% வாக்களிக்க வைப்பதற்கு தேர்தல் கமிஷன் பல்வேறு வழிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான சிம்பு வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பாடல் ஒன்றை எழுதி வருகிறார்.

தற்போது அப்பாடலின் ஒருசில வரிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை இங்கே பார்க்கலாம்

ஓட்டு போட வேண்டியது உன் கடமை
போடலைன்னா அது உன் மடமை
எதுக்குடா போடணும்னு நினைக்கிறது கொடுமை
அதனாலத் தான் நம்ம நாட்டுல இவ்வளவு வறுமை
நான் ஒருத்தன் போடலைன்னா என்னனு நீ நினைப்ப
உனக்கு வேண்டிய மாற்றத்தை நீயே தான் தடுப்ப
எவன் ஜெயிச்சா எனக்கு என்னனு நீ இருப்ப
தமிழ்நாட்டோட வளர்ச்சியை நீயே தான் கெடுப்ப
போடாம விட்டது பலவாட்டி
போட்டுத்தான் பாருடா இந்த வாட்டி
போடுங்கடா ஓட்டு இல்லாட்டி வேட்டு
போடுங்கடா ஓட்டு அதுக்குத்தான் இந்த பாட்டு

இதுகுறித்து சிம்பு ”தந்தை டி.ராஜேந்தர் பாணியில் எதுகை, மோனையுடன் ஒரு பாடாலை எழுதவேண்டும் என்ற என்னுடைய ஆசை இப்பாடலின் மூலம் நிறைவேறியிருக்கிறது.

இன்னும் ஒருசில நாட்களில் இப்பாடல் வெளியாகும்” என கூறியிருக்கிறார்.

Related Posts