பிள்ளைகளை பௌத்த மதத்துறவிகளாக்கிய தமிழ் தந்தை!

தமது நான்கு பிள்ளைகளையும் பௌத்த மதத் துறவிகளாக, தமிழ் தந்தையொருவர் மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வசித்து வந்த வீட்டை அடகு வைத்து மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த குறித்த நபர், மனைவி பற்றிய எவ்வித தகவல்களும் இல்லாத காரணத்தினால் இவ்வாறு பிள்ளைகளை பௌத்த மதத் துறவிகளாக மாற்றியுள்ளார்.

56 வயதான சித்திரவேல் சுந்தரலிங்கம் என்ற நபரே இவ்வாறு தனது மூன்று ஆண் பிள்ளைகளையும் ஒரு பெண் பிள்ளையையும் பௌத்த மதத் துறவிகளாக மாற்றியுள்ளார்.

பிள்ளைகளை பராமரிக்க முடியாது என்ற காரணத்தினால் இந்த நபர் இவ்வாறு பிள்ளைகளை பௌத்த மதத் துறவற வாழ்க்கையில் ஈடுபடுத்தியுள்ளார்.

சுந்தரலிங்கத்தின் வலது கை செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று ஆண் பிள்ளைகளையும் திம்புலாகல விஹாரை ஒன்றில் துறவிகளாக மாற்றியுள்ளதுடன், பெண் பிள்ளை பொலனறுவை விஹாரை ஒன்றில் பிக்குனியாக துறவறம் பூண்டுள்ளார்.

44 வயதான கந்தக்குட்டி கமலபூரணி என்ற குறித்த நபரின் மனைவி, வீட்டுப் பணிப் பெண்ணாக சவூதி அரேபியா சென்று 20 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் எவ்வித தொடர்பாடல்களும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

மனைவி பற்றிய எவ்வித தகவல்களும் இல்லை எனவும், தம்மால் பிள்ளைகளை பராமரிக்க முடியாது என்ற காரணத்தினாலும் அனைத்து பிள்ளைகளையும் பௌத்த துறவற வாழ்க்கையில் ஈடுபடுத்தியதாக சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.

Related Posts