பிளவுபடாத நாட்டில் அனைத்துமக்களும் இலங்கையர்களாக வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதன் அவசியத்தையும் எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்ப மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தின் 5ம் நாள் விவாதாம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. நேற்றய பாராளுமன்ற விவாதத்தை எதிர்க்கட்சி தலைவர் ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.
உரையாற்றிய அவர் அரசாங்கத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு எவரும் தடைஏற்படுத்தக்கூடாது என்று தெரிவித்த அவர் அரசசேவையை வளப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
பட்டதாரிகளுக்கு தொழில்களை வழங்குவதற்கு முறையான வேலைத்திட்டம் அமுல்ப்படுத்தப்பட வேண்டும்.உள்நாட்டில் உற்பத்திசெய்யக்கூடிய உணவுப்பொருட்களின் உற்பத்தியை கட்டுப்படுத்துவது அவசியமாகும். சகல இனத்தவர்களுக்கும் நீதி நிலைநாட்டப்படுவது முக்கியமானதாகும் .
நேர்மையான ஜனநாயக அரசாங்க நிருவாகம் இடம்பெற வேண்டும் என்பதையே சகல மக்களினதும் இதனாலேயே கடந்த இரண்டு தேர்தல்களிலும் முன்னாள் ஆட்சியாளர்களுக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள தமது ஆணையை வழங்கினார்கள். மக்களின் இந்த ஆணை தொடாந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு கிழக்கு மக்கள் 18 தமிழ் பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்துள்ளனர்.. இவர்களில் 16 பேர் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், இது 90 வீதத்துக்கும் அதிகமானதாகும். மக்கள் தம்மை பிரதிநிதித்துவம் செய்யுமாறு எம்மைத் தெரிவுசெய்துள்ளார்கள். நாம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவில்லை. எனினும், இலக்கை அடைவதற்காக நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விரும்புகின்றோம் என்றும் அவர் கூறினார்.
அரசாங்கத்தின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இலக்குகள் குறித்து வரவு-செலவுத்திட்ட உரையில் நிதி அமைச்சர் தெளிவு படுத்தியிருந்தார். மீள்குடியேற்றம், நல்லிணக்கம், நீடிக்கக் கூடிய சமாதானத்துக்கான அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும் கூறியிருந்தார்.
சுதந்திரத்தின் பின்னர் இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தன. முதல் தடவையாக இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து அரசியலமைப்பை தயாரிக்கும் பணியை முன்னெடுக்கின்றன. இரண்டு கட்சிகளும் கடந்த காலத்தில் தத்தமது அரசாங்கத்தின் கீழ் தனித்தனியே அரசியலமைப்புக்களை தயாரித்திருந்தன. எந்தவித புரிந்துணர்வுமின்றி; தனிக்கட்சி சார்ந்த அரசியலமைப்புக்களாக அவை தயாரிக்கப்பட்டிருந்தன. இவற்றின் மூலம் அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை. தற்பொழுது இரண்டு கட்சிகளும் இணக்கப்பாட்டொன்றுக்கு வந்து அரசியலமைப்பு தயாரிப்பு பணிகளை ஆரம்பித்துள்ளன.
இதில் மக்களின் கருத்துக்களும் முதல் தடவையாக கவனத்தில் கொள்ளப்படுகின்றமை சிறப்பு அம்சமாகும். பிரிக்கப்படாத நாடென்ற வரையறையில் இருந்துகொண்டு பரந்துபட்ட தரப்புக்களின் இணக்கப்பாட்டுடன் அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
இந்த அரசியலமைப்பு சகல மக்களின் விருப்பங்களையும் பிரதிபலிப்பதாக இருக்கும். தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளில் பங்கெடுத்துள்ளமையும் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என்றும் எதிர்க்கட்சித்தலைவர் சுட்டிக்காட்டினார்.
நிதி அமைச்சரின் புள்ளிவபரங்களுக்கு அமைவாக நாட்டின் கடன் சுமை 9 ரில்லியன் ரூபாய்களையும் விட அதிகமாகும். இதற்தமைவாக நாட்டின் வருமானத்தில் 90 வீத கடன்களை மீளச் செலுத்துவதற்கே செல்கிறது. இந்த கடன்சுமை எவ்வாறு அதிகரித்தது என்பதை நாடு அறிந்துகொள்ள வேண்டும். என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றை வைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான வரைபொன்றை அரசாங்கம் தயாரிக்க வேண்டும். வடக்கு, கிழக்கிற்கென விரிவான வேலைத்திட்டமொன்றையும் அரசாங்கம் தயாரிக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகளுடனும் இது தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என்று தெரித்த அவர் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றங்களைத் தட்டிக்களிக்க முடியாது. இது தொடர்பில் அண்மையில் முஸ்லிம் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடினோம், அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்திருந்தோம். தமது மீள்குடியேற்றம் நிராகரிக்கப்படுவதாக முஸ்லிம் மக்கள் கவலை தெரிவித்தனர், அவர்களுடைய இந்த கவலை நீடிக்கக் கூடாது. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டும் என்பதே தமிழ் மக்களினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் விருப்பமும் கொள்கையாகும்.
இதேவேளை, நாட்டிலுள்ள வசதி குறைந்த மக்கள் மீது மேலும் வரிச் சுமைகள் சுமத்தப்படக் கூடாது. நாடு கடனில் மூழ்கியிருந்தாலும் மக்கள் மீது சுமைகளை சுமத்தும் வகையில் வரி அதிகரிப்புக்கள் இடமபெறக்கூடாது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புத்தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான ஆர்.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.
விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல துறைமுகத்தின் நகரத்தினூடாக சீனாவிற்கு இலங்கையின் காணிகள் கையளிக்கப்பட்டிருந்தன . இதனை சமகால அரசாங்கம் குத்தகை என்ற ரீதியில் மாற்றியமைத்திருக்கின்றது.
வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் ஓர் அங்குல நிலமேனும் வழங்கப்படமாட்டாது. பெற்ற கடனை திருப்பி செலுத்தமுடியாமலேயே கடந்த மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தேர்தலை நடத்தியதாக அமைச்சர் கூறினார்.
யுத்தத்தில் வெற்றிகொள்ளப்பட்ட போதிலும் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய மஹிந்த ராஜபக்ச தவறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.