‘பில்லா 2018’ல் சிம்பு…

இது நம்ம ஆளு’ படத்தின் வெற்றியை அனிருத், சந்தானம் ஆகியோருடன் கொண்டாடியுள்ளார் சிம்பு. ‘பீப் சாங்’ பிரச்சனைக்குப் பிறகு சிம்புவும், அனிருத்தும் சந்தித்துக் கொண்டதாக எந்தத் தகவலும் வெளியில் வரவில்லை. ஆனால், நேற்று நள்ளிரவு சிம்பு, அனிருத், சந்தானம் ‘இது நம்ம ஆளு’ படத்தின் வெற்றியைக் கொண்டாடியதாக சிம்புவின் டிவிட்டர் தளத்தில் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது.

simbu

‘பீப் பாடல்’ அவர்களைப் பிரித்ததா, இன்னும் நெருக்கமாக இணைத்துவிட்டதா என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

நேற்று தன்னுடைய ரசிகர்களுடன் நேரடியாக வீடியோ சாட் மூலம் உரையாடிய சிம்பு, “ரஜினிகாந்த், அஜித்” நடித்த ‘பில்லா’ படத்தின் தொடர் பாகத்தில் ‘பில்லா 2018’ல் நடிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு கடைசியில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.

‘பில்லா 2018, படத்தில் நீங்க, நான் யுவன், என்ன சொல்றீங்க, நான் தயார்’ என இயக்குனர் வெங்கட்பிரபு கேட்க, அதற்கு சிம்புவும், ‘பொறந்ததுல இருந்தே ரெடி, ‘பில்லா 2018’, கலக்குவோம்,” என பதிலளித்திருக்கிறார்.

இரவு நேரத்திலும் ‘பில்லா 2018’ஐ டிவிட்டர் டிரென்டிங்கில் வரவைத்துவிட்டார்கள் சிம்புவின் ரசிகர்கள்.

Related Posts