பிலிம்பேர் விருது யாருக்கு? முன்னணி நடிகர்களிடையே போட்டி

தென்னிந்திய பிலிம்பேர் விருதில், சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் செல்ல, நடிகர் கமலுடன், அஜித், ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்டோர் மோதுகின்றனர்.

kamal-ajith-vikram-danush

தேசிய விருதுக்கு அடுத்தபடியாக நடிகர்கள், பிலிம்பேர் விருதையே பெரிய கவுரமாக நினைக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய சினிமா கலைஞர்களுக்கு, ஆண்டுதோறும் பிலிம்பேர் விருது வழங்கப்படுகிறது.

63வது ஆண்டாக, இந்த ஆண்டு விருது வழங்கும் விழா, ஐதராபாத்தில், 18ம் தேதி நடக்கிறது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், துணை நடிகர், இசையமைப்பாளர் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ், விருதுகள் வழங்கப்படுகின்றன.

தமிழ் படங்களுக்கான பட்டியலில், சிறந்த நடிகருக்கான விருது போட்டியில், நடிகர்கள் கமல் – ‛ பாபநாசம்’, அஜித் – ‛என்னை அறிந்தால்’, தனுஷ் – ‛அனேகன்’, ஜெயம் ரவி – ‛தனி ஒருவன்’ மற்றும் விக்ரம் – ‛ஐ’ ஆகியோர் மோதுகின்றனர்.

சிறந்த படங்களுக்கான பட்டியலில், 36 வயதினிலே, ஐ, காக்காமுட்டை, ஓகே கண்மணி, பாபநாசம் மற்றும் தனி ஒருவன் படங்கள் இடம் பெற்றுள்ளன.

சிறந்த நடிகையருக்கான பட்டியலில், ஐஸ்வர்யா ராஜேஷ் – ‛காக்கா முட்டை’, கவுதமி – ‛பாபநாசம்’, நயன்தாரா – ‛நானும் ரவுடி தான்’, ஜோதிகா – ‛36 வயதினிலே’, நித்யா மேனன் – ‛ஓகே கண்மணி’ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சிறந்த இயக்குனர்களுக்கான பட்டியலில் மோகன் ராஜா – ‛தனி ஒருவன்’, மணிரத்னம் – ‛ஓகே கண்மணி’, ஜித்து ஜோசப் – ‛பாபநாசம்’, மணிகண்டன் – ‛காக்காமுட்டை’, ரோஜன் ஆண்ட்ரீவ்ஸ் – ‛36 வயதினிலே’, ஷங்கர் – ‛ஐ’ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Related Posts