பிலிம்பேர் விருது : சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த நடிகை நயன்தாரா!

தென்னிந்திய படங்களுக்கான 63–வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், நடிகை உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டது.

தமிழில் சிறந்த நடிகராக விக்ரம் தேர்வு செய்யப்பட்டார். ‘ஐ’ படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் பெற்றார். சிறந்த படமாக ‘காக்கா முட்டை’ படம் தேர்வானது.

சிறந்த நடிகைக்கான விருதை ‘நானும் ரெளடி தான்’ படத்தில் நடித்த நயன்தாரா வென்றார். இந்த படத்தில் காது கேட்காத பெண்ணாக, மற்றவர்களின் உதட்டு அசைவை வைத்து வார்த்தையை உணர்வுபவராக நடித்து இருந்தார்.

சிறந்த இசையமைப்பாளர் விருதை ஏ.ஆர்.ரகுமான் (‘ஐ’ படம்) பெற்றார்.

தமிழில் வழங்கப்பட்ட மற்ற விருதுகள் விவரம் வருமாறு:–

சிறந்த இயக்குனர் – மோகன் ராஜா (தனி ஒருவன்)

சிறந்த துணை நடிகர் – அரவிந்த்சாமி (தனி ஒருவன்)

சிறந்த துணை நடிகை – ராதிகா சரத்குமார் (தங்க மகன்)

சிறந்த பாடலாசிரியர் – மதன் கார்க்கி (‘ஐ’– பூக்களே சற்று ஓய்வெடுங்கள்….)

சிறந்த பாடகர் – சித் ஸ்ரீராம் (‘ஐ’– என்னோடு நீ இருந்தால்…)

சிறந்த பாடகி – ஸ்வேதா மோகன் (தங்க மகன்– என்ன சொல்ல….)

சிறந்த விமர்சகர் விருது– நடிகர் – ஜெயம் ரவி (தனி ஒருவன்)

சிறந்த விமர்சகர் விருது– நடிகை – ஜோதிகா (36 வயதினிலே)

சிறந்த அறிமுகம் நடிகர்– ஜி.வி.பிரகாஷ்.

இயக்குனர் சங்கர் இயக்கிய ‘ஐ’ படம் 4 விருதுகளை (நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர்) பெற்றது.

தெலுங்கில் சிறந்த படமாக ‘பாகுபலி’ தேர்வு ஆனது. சிறந்த நடிகராக மகேஷ்பாபு (ஸ்ரீமத்துடு), நடிகையாக அனுஷ்கா (ருத்ரமாதேவி) விருது வென்றனர். சிறந்த இயக்குனருக்கான விருதை ராஜமவுலி (பாகுபலி) பெற்றார். சிறந்த பட விருதையும் பாகுபலி படமே பெற்றது.

மலையாளத்தில் சிறந்த நடிகர் விருது மம்முட்டி (பதேமாரி) வென்றார். நடிகைக்கான விருதை பார்வதி (என்னு நிண்டே மொய்தீன்) பெற்றார். சிறந்த படமாக ‘பதேமாரி’ தேர்வு செய்யப்பட்டது. கன்னடத்தில் சிறந்த படம் விருதை ரங்கீதரங்கா படம் பெற்றது. சிறந்த நடிகராக புனித் ராஜ்குமார் (ரானா விக்ரமா) தேர்வு செய்யப் பட்டார்.

விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

1466319101_suriya-jyothika-63rd-britannia-filmfare-awards-south

1466319101_dapper-jayam-ravi-takes-red-carpet-his-wife-63rd-britannia-filmfare-awards-south

1466319101_elegant-simple-nayanthara-takes-red-carpet-63rd-britannia-filmfare-awards-south

1466345318_actor-jayam-ravi-receives-his-1st-ever-filmfare-actor-suriya-thanioruvan-film-63rd-filmfare

Vikram won

Related Posts