கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு மத்தியில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை மேற்கொள்வதில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று பதிவாளர் நாயகம் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது..
இந்த விடயங்கள் தொடர்பாக பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
பதிவாளர் நாயகம் திணைக்களம்
எனது இலக்கம் : RG/AB/ 01
திகதி : 2020.03.30
பொதுமக்களுக்கான அறிவிப்பு
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலமையின் கீழ் அத்தியாவசிய சேவைகளுக்கு அமைவாக அடமான பாதுகாப்பு Mortgage protection உறுதிப் பதிவை மேற்கொள்வதற்காக பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக கீழ ;கண்ட தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொண்டு தகவல்களை கேட்டறியுமாறு தயவுடன் அறியத்தருகின்றோம்.
070 -1588433 – பதிவாளர் நாயகம்
என். சி.விதானகே
071 -3483238 – சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் (நிர்வாகம்)
புபுதிகா எஸ்.பண்டார
071-4485564 – உதவி பதிவாளர் நாயகம்
சி.எஸ்.-ஜாகொடயாராச்சி
070 -3899535 – உதவி பதிவாளர் நாயகம்
சமன் திசாநாயக்க
கையொப்பம் என்.சி.விதானகே
பதிவாளர் நாயகம்
பதிவாளர் நாயகம் திணைக்களம்
எனது இலக்கம் : RG/AB/ 01
திகதி : 2020.03.30
1951ஆம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை மேற்கொள்ளும் சட்டத்திற்கு அமைவாக பிறப்பு இடம்பெற்ற 3 மாதகாலத்திற்குள் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் மூலமும் , அதன் பின்னர் பிறப்பு இடம்பெற்ற இடத்திற்கு உட்பட்ட பிரதேச செயலக மூலமும் பிறப்பொன்றை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் உண்டு இதனால், இந்த சந்தர்ப்பத்தில் பிறப்பை பதிவு செய்வது தொடர்பில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டக்கொள்கின்றோம்.
இறப்பை பதிவு செய்யும் பணிகளும் இதற்கு முன்னர் சுற்றரிக்கை மூலம் அனைத்து உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்ட வகையில் இறப்பு சான்றிதழ் அல்லது கீழ்கண்ட ஆவணங்கள் மூன்றின் ஒன்றைப் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட மரணத்தின் இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக மயானம் ஃ தகனம் ஒதுக்கீடு செய்து கொடுக்குமாறு அனைத்து உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுக்கும் இதன் மூலம் அறிவிக்கின்றோம்.
1. பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரினால் வழங்கப்படும் அறிக்கை – (ஆவண இலக்கம் டீ-16
2. நீதவான் ஃ திடிர் மரண விசாரணை அதிகாரியினால் வழங்கப்படும் சான்றிதழ் – (ஆவணம் டீ -18
3. வைத்தியசாலை இறப்பு தொடர்பான அறிவிப்பு – (ஆவண இல டீ – 33)
கையொப்பம் என்.சி.விதானகே
பதிவாளர் நாயகம்