பிறந்த மேனியுடன் ஓடியவருக்கு விளக்கமறியல்

பல்லேகல மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (26) நிர்வாணமாக ஓட்டமெடுத்த வெளிநாட்டு பிரஜையை, ஒரு வாரம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

nude-1

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கண்டி பல்லேக மைதானத்தில் இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல்நாள் முடிவில் பின்னடைவைச் சந்தித்துத் தடுமாறிக்கொண்டிந்த நிலையில், வெளிநாட்டு பிரஜையொருவர், உடம்பில் ஒருதுண்டு துணியில்லாமல், மைதானத்தை சுற்றி ஓடிக்கொண்டிருந்துள்ளார்.

மழை பெய்துகொண்டிருந்த போதே அவர், மைதானத்தைச் சுற்றி நிர்வாணமாக ஓட்டமெடுத்துள்ளார். இதனை அவதானித்த பொலிஸார், அவரை மிக இலாவகமாக பிடித்து, மைதானத்துக்கு அப்பால் கூட்டிச்சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts