கமல், ரஜினி இருவரும் தங்களின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிப்பார்கள் என்று கோடம்பாக்கத்து செய்திகள் கூறுகின்றன.
அப்படி என்ன ஏமாற்றம்?
நவம்பர் 7 கமலின் பிறந்த நாளில் அவரது உத்தம வில்லன் வெளியாகும் என்றும், ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 லிங்கா வெளியாகும் எனவும் கூறப்பட்டது. ஆனால் நிலைமையைப் பார்த்தால் இந்த அறிவுப்புகள் பொய்யாகும் போல் உள்ளது.
விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் என கமலின் இரு படங்கள் தயாராக உள்ளன. இதில் உத்தம வில்லன் நவம்பர் 7 வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் டிசம்பருக்கு படவெளியீடு தள்ளிப் போகும் என பட யூனிட் கூறுகிறது.
அதேபோல் லிங்கா படமும் டிசம்பர் 12 -க்குப் பதில் 2015 பொங்கலுக்கே வெளியாகும் எனவும் தகவல்கள் கூறுகின்றன. இன்னும் சில தினங்களில் இந்தப் படங்களின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்படும் என நம்பப்படுகிறது.