அடுத்த வருடம் ஜனவரி முதல் இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
தற்போது நடைமுறையில் உள்ள அடையாள அட்டை முறையை இலத்திரனியல் அடையாள அட்டையாக மாற்றுவதற்குறிய செயற்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து இலத்திரனியல் அடையாள அட்டையை தயார்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து உள்ள அனைத்து தகவல்களும் இந்த இலத்திரனியல் அடையாள அட்டையில் உள்ளடக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 16 வயது வரை அடையாள எண் ஒன்று வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
16 வயது பூர்த்தியானதும் ஒவ்வொருவருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்