பிரிவினைவாதத்தை தூண்டுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்: கூட்டமைப்பு

tnaவடமாகாணம் தமிழ் மக்களின் தாயகம் இதில் மாகாணம் தவிர்ந்தவர்களின் குடியேற்றங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. எனினும் மூவின மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தோற்றுவிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க தூதரக அரசியல் அலுவலர் ஜேகப் கிறிஸ்டினை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சார்பாக தமிழரசுகட்சியின் துணைப்பொதுசெயலாளர் சி.வீ.கே.சிவஞானம் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலின் போது, தமிழ் மக்களின் தாயகமான வடமாகாணத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு அரசாங்கத்தினால் காணி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனால் தமிழ், முஸ்லிம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றதாகவும், பிரிவினை வாதத்தினை தூண்டுவதே அரசாங்கத்தின் நோக்கமென்றும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பரம்பரையாக வடமாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதில் எந்தவித ஆட்சேபனைகளும் இல்லை. ஆனால், வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் குடியேற்றப்படுவது விரும்பத்தகாத ஒரு விடயமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம்கள் மதத்தினால் வேறுபட்டாலும், தமிழ் மொழி பேசுபவர்கள் இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இவ்வாறான காணி வழங்கும் நடவடிக்கைகள் பிரிவினையை ஏற்படுத்துவது ஏதுவாக இருக்குமென்றும் அமெரிக்க தூதரக அரசியல் அலுவலகரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன், அமெரிக்காவினால் கொண்டு வரப்படும் தீர்மானம் பலமாக இருக்க வேண்டுமென்றும், பலவீனப்படுத்தகூடாதென்றும் அதில் அமெரிக்க உறுதியாக இருக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related Posts